2025 ஜூலை 02, புதன்கிழமை

வவுனியா சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

வவுனியா சிறைச்சாலையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் இன்று சனிக்கிழமையிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.  

வவுனியா சிறைச்சாலையில் ஏற்கெனவே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நான்கு அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏனைய அரசியல்க் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அவர்களுக்கான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரியும் விடுதலை செய்யப்பட்ட தங்களை மீண்டும் கைதுசெய்யக் கூடாதெனக் கோரியும் மேற்படி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

ஏற்கெனவே உண்ணாவிரத்தில் ஈடுபட்ட நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமாகி வருவதாக வைத்தியர்கள் மூலம் தெரியவருவதாகவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

மேற்படி தமிழ் அரசியல்க் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரியப்படுத்தியிருந்தோம். அவர்களும் இது குறித்து ஏனைய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இருப்பினும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகி விட்டன. மேற்படி கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன் கூறினார்.

நீதியமைச்சின் அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகள் வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை  பார்வையிடும் வரை உண்ணாவிரதம் தொடருமெனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .