2021 மே 08, சனிக்கிழமை

முள்ளிக்குளம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு கோரி மௌன ஊர்வலம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம்பெயர்ந்து 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில் உடனடியாக தங்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை காலை மௌன ஊர்வலமொன்றில் ஈடுபட்டனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் தேவாலயத்தில் ஒன்று திறண்ட முள்ளிக்குளம் கிராமத்தினைச் சேர்ந்த சுமார் 1500 இற்கும் மேற்பட்ட மக்கள்,  மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் ஆசீர்வாதத்துடன் தமது மௌன ஊர்வலத்தினை ஆரம்பித்தனர்.

மேற்படி ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பாஸக்ர் பகுதியூடாக மன்னார் மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது.
இந்த ஊர்வலத்தின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, அருட்தந்தையர்கள், முள்ளிக்குளம் கிராம மக்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
பின் கிராம மக்களினால், மன்னார் மறைமாவட்ட ஆயர் முன்னிலையில் மன்னார் மாவட்ட அரசாஙக அதிபர் என்.வேதநாயகனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் அதனை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X