2021 மே 12, புதன்கிழமை

மாடு குறுக்கிட்டதில் விபத்து; ஒருவர் பலி; இருவர் காயம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன், செம்மண் தீவுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் குறித்த பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்துக்கு குறுக்காக மாடொன்று சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடம் புறண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மன்னார் மாவட்ட மீள் எழுச்சித் திட்ட அலுவலகத்தின் சாரதியான லோறன்ஸ் ரொனிஸ் டி மெல் (வயது 26) என்பவரே உயிரிழந்தவராவார்.

அத்துடன், மேற்பட்ட அலுவலகத்தின் நிதி உத்தியோகஸ்தர் மற்றும் வவுனியா மாவட்ட மீள் எழுச்சித் திட்ட அலுவலகத்தின் தொழில்நுட்ப அதிகாரி ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வவுனியா மாவட்ட மீள் எழுச்சித் திட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்புகையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .