Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
தமிழ் - முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக தனது பேனா முனையினை பயன்படுத்திய சிறந்த ஊடகவியலாளரான விவேகராசாவின் மறைவை கேள்வியுற்றதுடன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அன்னாரது பிரிவால் துயறுரும் அவரது குடும்பதிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக அமைச்சர் றிசாட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"வன்னி மாவட்டத்தில் வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் விவேகராசா, நேர்மை மிகு ஊடகவியலாளராவார். சமூகங்களுக்கிடையில் மிகவும் நெருக்க உறவை ஏற்படுத்துவதில் கடந்த பல வருடங்களாக அவர் எழுத்துருவமாக வெளிக்கொண்டு வந்தவர்.
குறிப்பாக வன்னி வாழ் மக்களின் அவல வாழ்வுக்கு, தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக பல முறை எம்முடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியதை நினைவு கூறுவது இவ்விடத்தில் பொருத்தமாகும்.
இவரது இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் ஊடக சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக் கொள்கின்றேன்".
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago