2021 மே 17, திங்கட்கிழமை

நீதிமன்றத்தினுள் கைப்பேசி ஒலித்ததால் அபராதம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் நீதவான்  நீதிமன்றத்தினுள் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவருடைய கையடக்கத் தொலைபேசியில் இருந்து ஒலி எழுந்தமையினைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு அபராதத் தொகையுடன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் நீதவான்  நீதிமன்றத்தினுள் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் வழக்கு விசாரணைகள் இடம்பெறும் சமயத்தில் நீதவான் ஆசனத்திற்கு வந்த போது நீதிமன்றத்தினுள் இருந்த நபர் ஒருவருடைய கையடக்கத் தொலைபேசி இயங்கத் தொடங்கியது.

இதன் போது ஒலி எழும்பியது. இதனைத் தொடர்ந்து குறித்த நபர் நீதி மன்றத்தினுள் வைத்தே கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் திருமதி.கே.ஜீவரானி முன்னிலையில் ஆஜர்பாடுத்தப்பட்ட போது குறித்த நபருக்கு 1,500 ரூபா அபராதத் தொகை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .