2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மன்னாரில் தேசிய சுகாதார வாரம் அனுஷ்டிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இன்று திங்கட்கிழமை தேசிய சுகாதார வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட், உதவி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அரவிந்தன், மன்னார் நகர சபை தலைவர் சந்தான் பிள்ளை ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு இன்று 3ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலான ஏழு தினங்களுக்கு மன்னார் மாவட்டத்தில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--