2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் பஸ் நடத்துனர் பலி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கபில்)

வவுனியா  ஏ - 9 வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பஸ் நடத்துனர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு பஸ்ஸொன்று   யாழ்ப்பாணத்திற்கு ஓடுகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக டிப்பர் வாகனத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்தது.  இதன்போது டிப்பர் ரக வாகனமும் பஸ்ஸும் சேதமடைந்துள்ளன.  

பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில தினங்களாக விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன், இதனால் மரணங்களும் சம்பவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--