2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கிளிநொச்சி மாவட்ட மகளிர் அபிவிருத்தி அமைப்பு அங்குராப்பணம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

கிளிநொச்சி மாவட்ட மகளிர் அபிவிருத்தி அமைப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் கிளிநொச்சி மாவட்ட மகளிர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கையாளக்கூடியதாக இருக்கும் என்பதுடன் மகளிருக்கான வாழ்வாதார செயற்பாட்டுடனான நிகழ்ச்சித் திட்டங்களையும் முன்கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் த.கிருபாகரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தலைமை அதிகாரி வி.நவநீதன் ஆகியோர் பங்குபற்றியிருந்ததுடன் அமைப்பின் தலைவியாக தர்மலிங்கம் செல்வராணியும் செயலாளராக ஜெ.கிறிஸ்ரினம்மாவும் பொருளாளராக சி.வி.தவசிறியும் தெரிவு செய்யப்பட்டதுடன் பதினைந்து பேர் கொண்ட நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--