Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார், சாவக்காட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக அருக்கப்பட்ட இரண்டு பசுக்களின் இறைச்சிகளை மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் தலைமையிலான பொது சுகாதார பரிசேதகர்கள் மீட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காக மாடுகள் அருக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் தலைமையிலான் பொது சுகாதார பரிசேதகர்கள் குழுவினர் குறித்த பகுதியில் உள்ள வீட்டில் சோதனையினை மேற்கொண்டனர்.
இதன்போது இரு பசுக்களின் இறைச்சிகளை மீட்டதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 போருக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த இறைச்சிகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago