2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கல்மடு பிரதேசத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 13 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

வவுனியா, கல்மடு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு  ஆயுதங்களை இன்று வியாழக்கிழமை மீட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 5 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1.5 கிலோகிராம் நிறையுடைய 3 கிளேமோர் குண்டுகளும் 1 கிலோ கிராம் நிறையுடைய 10 கிளைமோர் குண்டுகளும் மோட்டார் குண்டு ஒன்றும் ஜொனி மிதிவெடிகள் 3 மற்றும் டெட்டனேட்டர் வயர் ஒன்றும் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி அசேல கே.ஹேரத் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட ஆயதங்களை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்தின, பொலிஸ் மூலஸ்தான பொலிஸ் அதிகாரி அசேல கே.ஹேரத் , மேலதிக பொலிஸ் தலைமையகத்தின் பொறுப்பதிகாரி பிரட்ரிக் தம்மன ஆராட்சிகே ஆகியோர் பார்வையிடுவதை படங்களில் காணலாம்.


  Comments - 0

 • THIVAAN Friday, 14 October 2011 01:52 PM

  பதவி உயர்வு தேவை ,

  Reply : 0       0

  nakkiran Saturday, 15 October 2011 01:50 AM

  கொழும்பில் அரசுக்கு பாதகமான செய்திகள் வரும்போது வடகிழக்கில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பார்கள்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--