2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மன்னார் வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் வங்காலை கடற்கரையில் மிகவும்  உருக்குலைந்த நிலையில் சடலமொன்று பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

நேற்று  செவ்வாய்க்கிழமை பகல் வங்காலையிலிருந்து மன்னார் நோக்கி 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடற்கரையோரத்தில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து  குறித்த இடத்திற்கு வந்த  மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன்,  நீதவானின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

சடலத்தை பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி எ.யூட்சன், உறவினர்கள் சடலத்தை அடையாளம் காணும் வகையில்  14 நாட்கள் மன்னார் பொதுவைத்தியசாலையில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

தற்போது சடலம் மன்னார் பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சடலம் அடையாளம் காணமுடியாதவாறு மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இச்சடலம்; தலை மற்றும் கைகள் அற்ற நிலையில் காணப்பட்டபோதிலும் சாம்பல் நிறத்திலான உள்ளங்கியுடன் சடலம் காணப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X