2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
மன்னார், பள்ளம் கோட்டை கிராமத்தில் கிணறொன்றினுள் இருந்து பெண்கள் இருவரின் சடலங்களை இ;ன்று வியாழக்கிழமை மீட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பள்ளம் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த  ராசு நாக லக்ஸ்மி (வயது 43), தனி நாயகம் ராஜ லக்ஸ்மி (வயது 45) என்ற இருவரும் நேற்று புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் உறவினர்கள் தேடியபோது, இன்று வியாழக்கிழமை காலை கிணறு ஒன்றினுள் இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  

முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்க விரைந்த பொலிஸார் இரு சடலங்களையும் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மன்னார் நீதவான் திருமதி கே.ஜீவரானி சடலங்களை பார்வையிட்டதோடு குறித்த இரண்டு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தமாறு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--