Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 நவம்பர் 14 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
ஐக்கிய நாடுகள் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டமும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும் இணைந்து வவுனியா பிரதேச செயலக பிரிவிற்கான நடமாடும் சேவையினை எதிர்வரும் 22 ஆம் திகதி நடாத்தவுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள இந்நடமாடும் சேவை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையின் ஊடாக வவுனியா பிரதேச செயலகத்தற்குட்பட்ட பிரிவு மக்கள் தங்களுடைய சட்ட ஆவணங்களான பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தல், இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், காலங்கடந்த பிறப்பு, இறப்பு, திருமண பதிவு தொடர்பான ஆலோசனைகளும் தீர்வுகளும், இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கான இலங்கை பிறப்பு சான்றிதழ் தொடர்பான ஆலோசனைகள், இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமை சான்றிதழ் தொடர்பான ஆலோசனைகள் போன்ற சேவைகள் நடைபெறவுள்ளன.
இந்நடமாடும் சேவையின் போது முத்திரை மற்றும் புகைப்பட செலவுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago