2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மன்னார் மீனவர்களுக்கு சங்குகள், கடலட்டைகள் பிடிக்க அனுமதி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 18 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூர் மீனவர்கள் 250 பேருக்கு உடனடியாக சங்குகள் மற்றும் கடலட்டைகளை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் பி.எஸ்.மெரான்டா தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் சங்குகள் மற்றும் கடலட்டைகளை  பிடிப்பதற்கு தமக்கு  விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி அங்குள்ள மீனவர்கள்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஏ.சரத் ரவீந்திரவிடம் மகஜரொன்றை நேற்று வியாழக்கிழமை கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் மீனவர்களுடன் அரசாங்க அதிபர் ஜே.ஏ.சரத் ரவீந்திர தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.  இதன்போது மீனவர்களின்  பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்திடமும்  இப்பிரச்சினை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே மீனவர்கள் 250 பேருக்கு உடனடியாக சங்குகள் மற்றும் கடலட்டைகளை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை, மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் பி.எஸ்.மெரான்டா, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.மோகநாதன் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .