2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

தாலிக்கொடி திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

கிளிநொச்சியில் கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்ட சந்தேக நபரை டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் ஐந்தரைப் பவுண் எடையுள்ள  தாலிக்கொடியை திருடியதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு  நேற்று புதன்கிழமை கிளிநெச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையிலேயே சந்தேக நபரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .