2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் கரையொதுங்கிய சடலம் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படும் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை  அடையாளம் காணமுடியாத வகையில் சடலமொன்று கரையொதுங்கியது. தலை மற்றும் கால்ப் பகுதிகளற்ற  நிலையில் அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்து  காணப்பட்ட இச்சடலம் முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இந்த நிலையிலேயே மேலதிக பரிசோதனைக்காக குறித்த சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .