2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

பல்துறைசார் ஆளுமையுள்ளவர்களை தெரிவுசெய்வதற்கான போட்டி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)  

வடமாகாணத்தில் பல்துறை சார்ந்த ஆளுமையுள்ளவர்களை தெரிவுசெய்வதற்கான போட்டி நடைபெறவுள்ளது.   வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் ஆளுமையுள்ள இருபாலார்களையும் தெரிவுசெய்வதற்கான இப்போட்டியை 'பிக் ரைம்' என்ற நிறுவனம் நடத்தவுள்ளது.

இப்போட்டியில் இசை, நடனம், கல்வி, விளையாட்டு, மற்றும் ஏனைய துறைகளில் சிறந்து விளங்குகின்ற 17 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ளமுடியும்.  

வடமாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் பிரிவுகள் தோறும் இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட மட்டத்திற்கு தெரிவுசெய்யப்படுவார்கள். மாவட்ட மட்டத்திற்கு வெற்றி பெறுபவர்கள் மாகாண மட்டத்திற்கு   தெரிவுசெய்யப்படுவார்கள்.  இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முதல் 10 இடங்களிலுள்ள ஆளுமையுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

அழகான உடல் அமைப்பு, ஆளுமை, அகத்தின் அழகு என்பவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் கலாசாரம் பண்பாடு என்பவற்றிற்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குறித்த போட்டி நடத்தப்படும்.

இப்போட்டியில் பங்குபற்ற விரும்புகின்றவர்கள் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கலாசார உத்தியோகஸ்தர்களிடம் தொடர்புகொண்டு விண்ணப்பபடிவங்களையும் போட்டி விதிமுறைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .