2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வவுனியாவில் ஊழியர்களுக்கான சேமலாபநிதி பதிவு நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா தொழில் திணைக்களத்தில் இரு நாட்களாக ஊழியர்களுக்கான சேமலாப நிதிப் பதிவு நடவடிக்கைகள் நடைபெற்றன.  
நேற்றுமுன்தினம் புதன்கிழமையும் நேற்று வியாழக்கிழமையும் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மோசடிகளை தடுப்பதற்காகவும் ஊழியர்களுக்கு சேமலாப நிதி பற்றியும் நிதியின் வரைமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கவும் தொழில் திணைக்களத்தால் இப்பதிவு நடவடிக்கைகள் விசேடமாக மேற்கொள்ளப்பட்டன.

இதில் நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்.இதன்போது  சேமலாப நிதியத்தன் அங்கத்தவர்களின் உறுதிப்பாட்டுக்கான அடையாள அட்டை இலக்கம், கைவிரல் அடையாளம் போன்றவை எடுக்கப்பட்டதுடன், இலவச புகைப்பட சேவையும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X