2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் தேசிய பனை நடுகை வாரம்

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

பனை வளத்தை பெருக்குவதற்கும் பனை உற்பத்தி பொருட்களின் மூலமான சுயதொழிலை மேம்படுத்தவும் தேசிய பனை நடுகை வாரம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

பனை அபிவிருத்தி சபை இலங்கை வங்கியின் வவுனியா நகர கிளையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதல்நாள் நிகழ்வுகள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் என்.பத்மநாதன், இலங்கை வங்கியின் நகர கிளை முகாமையாளர் றோய் ஜெயக்குமார் உட்பட பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, நூறு பனை மரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .