2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இந்திய உதவியில் துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் 200 துவிச்சக்கரவண்டிகளை இன்று வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வைத்து கையளித்தது.

பல்வேறு வகையிலும் பாதிப்படைந்து வறுமையில் வாழும் 200 குடும்பங்களுக்கு இத்துவிச்சக்கரவண்டிகளை வழங்குவதாக நிகழ்விற்கு தலைமைவகித்த வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.எம்.ஜானக தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வவுனியா அமைப்பாளர் சுமதிபால உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .