2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மீன் வாடி தீப்பிடித்து முற்றாக அழிவு

Super User   / 2012 நவம்பர் 12 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளன தலைவரின் மீன் வாடி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பஸார் பகுதியில் நகர சபைக்கு சொந்தமான மீன் சந்தை கட்டிடத்திற்கு அருகாமையில் இருந்த குறித்த மீன் வாடியே எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த தீ அனர்த்தத்தையடுத்து வாடியின் உரிமையாளரான ஜெஸ்டின் சொய்சா மன்னார் பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் இனம்தெரியாத நபர்களினால் வேணும் என்றே தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த மீன் வாடியினுள் காணப்பட்ட 4  வெளியினைப்பு இயந்திரங்கள், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள், ஆழ்கடலில் சூழி ஓடுவதற்காக பயன்படுத்தப்படும் சப்பாத்துக்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான லீற்றர் எரிபொருட்கள் உட்பட பல இலட்சம் ரூபாய் பெருமதியான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த தீ விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .