2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

தெரு மின் விளக்குகளை பராமரிக்கும் பணி மின்சார சபையிடம் கையளிக்கப்படவுள்ளது

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் நகர சபையின் எல்லைக்கு உட்பட்ட அனைத்து தெரு மின் விளக்குகளையும் பராமரிக்கும் பணி இலங்கை மின்சார சபையிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளது என மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் நிர்வாக எல்லைக்குள் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகள் காணப்படுகின்றன.

குறித்த மின் விளக்குகளில் சுமார் 400 மின் விளக்குள் அண்மையில் பொருத்தப்பட்ட நவீன ரக விளக்குகளாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மின் விளக்குகளை நன்கு பராமரிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதி உன்னத பயனை பெற்றுக்கொடுக்கும் நோக்குடனேயே மின்சார சபையிடம் தெரு மின் விளக்குகளை பராமரிக்கும் பொறுப்பு வழங்கவுள்ளது என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .