2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'கனகராயன்குளம் பொதுச்சந்தை தொடர்பில் பிரதேச சபை கவனம் செலுத்தவேண்டும்'

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பொதுச்சந்தை பயன்பாடு இன்றி காணப்படுவதாகவும் இது தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச சபை கவனம் செலுத்தி அதனை இயங்கச்செய்ய வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் பிரசேசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல இலட்சம் ரூபா செலவில் சேவாலங்க நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட இச் சந்தை கட்டிடத்தொகுதியானது மக்கள் பாவனைக்கு உட்படாது மூடப்பட்டுள்ளமையினால் அது சேதமடையும் நிலையில் உள்ளதாகவும் அதனை சீரமைத்து மக்கள் பாவணைக்கு விடுவதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேசசபையின் உபதலைவரிடம் கேட்டபோது இச்சந்தை மக்கள் பாவனையின்றி காணப்படுவது உண்மையெனவும் அதற்கான நடவடிக்கையை பிரதேசசபை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .