2025 ஜூலை 09, புதன்கிழமை

நேர்முக பரீட்சையில் அதிபர்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டுள்ளது என விசனம்

Super User   / 2012 நவம்பர் 20 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

கடமை நிறைவேற்று அதிபர் நியமனத்திற்கான நேர்முக பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு வலய கடமை நிறைவேற்று அதிபர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக யுத்த சூழ்நிலையிலும் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றிய அதிபர்களுக்கு தற்போது கல்வி அமைச்சினால் நடத்தப்படவுள்ள அதிபர் நியமனத்திற்கான நேர்முக பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட அதிபர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வவுனியா வடக்கு வலய கல்வி அலுவக அதிகாரிகளுடனும் வட மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுடனும் தாம் தொடர்பு கொண்டு கேட்ட போதிலும் சாதகமான பதிலெதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்த அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளால் சுமார் 40 அதிபர்கள் வவனியா வடக்கு வலயத்தில் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளரடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

"இவ்விடயம் தொடர்பாக வட மாகாண கல்வி திணைக்களத்திற்கு தாம் தமது பெயர் பட்டியலை வழங்கியிருந்ததாகவும் எவ்வாறான காரணங்களால் அவர்களுக்கான அழைப்பு வரவில்லை என்பது தெரியவில்லை.இது தொடர்பில் தான் வட மாகாண கல்வி திணைக்களத்துடனும் கல்வி அமைச்சுடனும் தொடர்பு கொண்டுள்ளனதாகவும் அந்த வகையில் வவுனியா வடக்கு அதிபர்களின் பெயர்ப்பட்டியல் உள்டக்கப்பட்டுள்ளதாக தான் அறிந்துள்ளேன்" என்றார்.

எனினும் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வரவில்லை என தெரிவிப்பவர்கள் அது தொடர்பிலான மேன் முறையீடுகளை பெற்று அனுப்புமாறு கல்வி அமைச்சு கேரியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .