2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

எயிட்ஸ் தினத்தையொட்டி மன்னாரில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

உலக எயிட்ஸ் தினத்தையொட்டி மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்திருந்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமான குறித்த ஊர்வலம் மன்னார் வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.

பின் அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மீண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்தது.

இதன்போது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் எயிட்ஸ் நோய் தொடர்பான விழிர்ப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு சென்றதோடு மக்களுக்கு அறிவவுருத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .