2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் குளங்கள் வான்பாய்கின்றன

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்


கிளிநொச்சி மாவட்டத்தில்  பெய்த மழையால்  கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், கரியாலைக்குளம், குடமுறுட்டிக்குளம், கல்மடுக்குளம் பிரமனந்தாறுக்குளம், அக்கராயன் குளம் ஆகிய குளங்கள் வான்பாய்கின்றன. 

இதேவேளை, புதுமுறிப்புக்குளம், இரணைமடுக்குளம் ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

தற்போது பெய்த மழையால் நெல் வயல்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்யமுடியாதுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--