2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வவுனியாவில் தொடர் மழை; போக்குவரத்து பாதிப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியாவில் நேற்று முதல் பெய்துவரும் மழையின் காரணமாக குளங்கள் மீண்டும் வான் பாய்வதுடன் வீதிகளில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையினால் குளங்கள் வான் பாய்ந்ததுடன் வெள்ள நிலையும் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்ண்க்பது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் பெய்து வரும் மழையினால் மீண்டும் குளங்கள் வான் பாய்ந்து வருவதுடன் சில வீதிகிகளில் வெள்ள நீர்த்தேங்கி இருப்பதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகின்றது.

இதேவேளை குளங்களை அபகரித்து வீடுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் வீடுகளினுள் வெள்ளநீர் உட்செல்லும் நிலை காணப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X