2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி எல்லைகளை பிரிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்


கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூராட்சி எல்லைகளைப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறையின் கீழ், வட்டார அடிப்படையில் எல்லைகள் நிர்ணயிக்கப்படவுள்ளன.

இந்த புதிய நடைமுறை தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறையின் கீழ் வட்டார அடிப்படையில் எல்லைகளை நிர்ணயம் செய்வது பற்றிய விளக்கம், வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளர் என்.அச்சுதனால் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மூன்று பிரதேச சபைகளும் 35 உறுப்பினர்களும் உள்ளன. புதிய தேர்தல் முறையின் மூலம் கரைச்சிக்கு 21 வட்டாரங்களும் பச்சிலைப்பள்ளிக்கு 10 வட்டாரங்களும் பூநகரிக்கு 10 வட்டாரங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வட்டார எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனை வழங்கும் இறுதித் திகதி இம்மாதம் 21ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது என அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்;சி உதவி ஆணையாளர் ஏ.ஜக்ஸில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சீனிவாசன், உதவி அரசாங்க அதிபர் ஜெயராணி, கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்கள், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் நா.வை.குகராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், புள்ளிவிபரவியலாளர், நில அளவை அத்தியட்சகர், உதவித்திட்டமிடற் பணிப்பாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X