2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

'ஆயரும் குருக்களும் தமிழ் மக்களின் உரிமைக்காக செயற்படுகின்றனர்'

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யுத்த காலத்திலும் சரி தற்போதைய காலங்களிலும் சரி ஆயரும் சக குருக்களும் தமிழ் மக்களின்   உரிமைக்காகவும் அரசியல் தீர்வுக்காகவும் விடுதலைக்காகவும் உறுதியுடன் செயற்பட்டனர் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை இ.செபமாலை அடிகலார் தெரிவித்தார்.

அதுபோன்று தற்போதும் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் மாவட்ட கத்தோலிக்க அருட் தந்தையர்களின் ஜனாதிபதியுடனான சந்திப்பு தமிழ் மக்களை காட்டிக்கொடுப்பதாகவோ அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாகவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்இ


'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 18ஆம் திகதி கத்தோலிக்க குருக்கள் கொழும்பிற்கு சென்று சந்தித்தோம். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை அடைந்து கொள்ள தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு சார்பாக உள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை குறித்த சந்திப்பின் பின் நான் உணர்ந்துகொண்டேன்.

தமிழ் மக்கள் வேறு எந்த கட்சிகளுக்கு வாக்களித்தாலும் அவர்களின் செயற்பாடுகள் அதிகரித்த நிலையில் தமிழ் மக்கள் அடிமைகளாக்கப்படுவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் சுய நிர்னயம்இ அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உரிமை தொடர்பில் குரல் கொடுத்து வருகின்றது தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் ஆகும்.

எனவே தமிழ் மக்கள் சலுகைகளுக்காக விலை போகின்ற சந்தர்ப்பங்களும் அதிகாரிகள் தமது பதவிக்காக அவர்கள் பக்கம் நிற்கின்ற சந்தர்ப்பங்களும் அப்பாவி ஏழை மக்கள் விலை பேசப்படுகின்ற சந்தர்ப்பங்களும் இடம்பெற்று வருகின்றது. -மக்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் தேவைப்படுகின்றது. சில சில சலுகைகளுக்காக எமது உரிமைகளை இழக்கின்றோம்.

நாம் தற்போது முக்கிய கட்டத்தில் இருக்கின்றோம். சகல நாடுகளும் அவதானித்துக்கொண்டிருக்கின்றது. எமது முக்கிய நோக்கம் இந்த வட மாகாண சபையை அமைத்து தமிழ் மக்களின் கைகளில் வருகின்ற போதை நாம் உறுதியான முடிவை எடுக்க முடியும்.

நாங்கள் எமது விடயங்களில் உறுதியாக இல்லாது விட்டால் ஏனையவர்கள் எங்களை ஏளனமாக பார்ப்பார்கள். எனவே இந்த சந்தர்ப்பத்தை தவரவிட வேண்டாம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--