2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சம்பந்தனுக்கு எதிராக சுவரொட்டிகள்

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்னம் கபில்நாத்


இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற அமைப்பே இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளது.

உண்ணாவிரதம், மறியலுக்கு மாவை அண்ணன் மகுடம் சூடுவது விக்னேஸ்வரனா?, சகுனி தொடங்கியது பாஞ்சாலியை வைத்து சம்பந்தன் தொடங்குவது விக்னேஸ்வரனை வைத்தா?, சம்பந்தன் ஐயா சகலதும் தெரிந்த நீங்கள் சடுதியில் மாறியது ஏன்?, சந்தி சிரிக்க வைக்க பெற்ற தொகை எவ்வளவு?, மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் போன்ற வாசகங்கள் இந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி நகரிலும் இது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி எனும் பெயரிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பசியில் இருந்த போதும் சிறையில் இருந்த போதும் எமக்காய் உருகிய மாவை அண்ணணை எப்படி மறப்போம்?, சம்பந்தன் ஐயா உங்கள் முதலமைச்சருக்கு கோணாவிலும் கேப்பாபுலவும் எங்குள்ளது என்று தெரியுமா?, நாங்கள் துன்பப்பட்ட போது விக்கினேஸ்வரன் ஐயா எங்க போனவர்? போன்ற வாசங்கள் இந்த சுவரொட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


  Comments - 0

  • Tharan Wednesday, 24 July 2013 01:57 PM

    பதவி மோகங்களினால் வாழும் கூட்டம் அரசியல் சர்பற்ற ஒருவர் வந்தால் அதை ஏன் வேண்டாம் என்று எதிர்கின்றனர். மாவை சேனாதிராஜா அவர்கள் கூட இந்த சுவரொட்டியின் படி தனக்கு முதல்லமைச்சர் பதவி வேண்டுமென்பது போல் இருக்கின்றது...
    ஆளத்துடிக்கும் கட்சிகளே இது நியாயமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X