2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ரதனின் தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் விநியோகம்

Kogilavani   / 2013 ஜூலை 30 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் உள்ளடக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பிரஜைகள் குழு என்ற பெயரில் பரவலாக இத் துண்டு பிரசுரங்கள் விநியோகப்படுத்தப்பட்டுள்ளன.

இத் துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பல ஜாம்பவன்களால் உருவாக்கப்பட்ட  தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்கட்சி ஜனநாயகமற்று வரம்பு மீறி தடம் புரண்டு செல்லுகின்றது.

தற்போது இறந்து போன போராளிகளினதும் பொதுமக்களினதும் கல்லறை மீது நின்று அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வேட்பாளர் தெரிவு என்னும் பெயரில் விபசாரம் செய்கின்றது.

முள்ளியவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காய் நீலிக்கண்ணீர் வடித்த ரதன் வன்னி மக்களின் வேட்பாளராம் தற்கொலை முயற்சியால்.

வந்தோரை வாழவைக்கும் வன்னி மண்ணின் மக்கள் தம்மை தாமே ஆளும் உரிமையற்ற மாட்டு மந்தைகளா?
சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக போராடுவதாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னி மக்களின் சுதந்திரத்தை பறிப்பதா? தமிழ் தேசியம்.

வேட்பாளர் தெரிவில் பரிமாறும் பணம் தலைமைக்கா? அல்லக்கைகளுக்கா?

தமிழ் தேசியம் காக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக தான்தோன்றித்தனமாக தடிவாளமற்று கட்டவிழ்ந்து திரியும் கூட்டமைப்பை வழிப்படுத்தி வழிநடத்த தமிழ் தேசியம் காக்கும் எம் மக்களே வாரீர்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • vanniyan Tuesday, 30 July 2013 05:58 PM

    யாழ்ப்பாணத்தான் அரசியல் களம் வன்னி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X