2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா கைப்பற்றப்பட்டன; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் கடந்த ஜுலை மாதத்தில் பெருந்தொகையான கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் பொலிஸாரும் மன்னார் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே  பெருந்தொகையான கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தென்னிந்தியாவிலிருந்து படகு மூலம் மன்னாருக்கு கஞ்சாவை கொண்டுவந்தபோதே இச்சந்தேக நபர்களை  கைதுசெய்ததுடன், கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .