2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியாகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான எஸ் தேவராஜா என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதேச செயலகத்தில் இருந்து மதிய உணவிற்காக வீடு சென்றுகொண்டிருந்த சமயம் நெடுங்கெணியில் உள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தில் பத்திரிகையை கொள்வனவு செய்துகொண்டிருந்த போது அரசியல் ரீதியாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போதே சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் கால்கள் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு சிரமத்தை எதிர்கொள்ளும் சமுர்த்தி உத்தியோகத்தர் மீதே பிரஜைகள் குழுவின் தலைவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை இன்று மாலை தன் மீது இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பிரஜைகள் குழுவின் தலைவரும் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவருமான எஸ். தேவராஜாவினால் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமது சக உத்தியோகத்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வண்;மையாக கண்டிப்பதாக வவுனியா வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளதுடன் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--