2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வெதுப்பகம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு திருக்கேதீச்சரம் சிவனருள் இல்லத்தின் ஏற்பாட்டில்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முகமாக வெதுப்பகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வெதுப்பகத்தை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.மோகன்ராஜ் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  திறந்து வைத்தார்.

இந்த வெதுப்பகத்தில் பணியாற்றுவதன் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் சிவனருள் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--