2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் 'பெற்றோரியம்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்ணாட்டினால் எழுதப்பட்ட பெற்றோரியம் நூல் வெளியீடு இன்று (5.12) கல்லூரியின் பல்நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் கிறிஸ்தவ மன்றத்தினால் வெளியிடப்பட்ட இந்நூல் வெளியீட்டு நிகழ்வு ஆசிரிய கல்வியியலாளர் நிலோமி அன்ரனி குரூசின் தலைமையில் இடம்பெற வெளியீட்டு உரையினை உப பீடாதிபதி சு.பரமானந்தம் ஆற்றியிருந்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வவுனியாவின் சிரேஷ்;ட உளவளதுணையாளர் கலாநிதி பி.ஏ.சி.ஆனந்தராஜா கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைக்க முதல் பிரதியினை செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க பொதுமுகாமையாளர் க.சுரேந்திரன் பெற்றுக்கொண்டிருந்தார்.

மதிப்பீட்டு உரையினை வவுனியா வடக்கு கல்வி வலயத்தை சேர்ந்த அதிபர் திருமதி பத்மா ஜெயச்சந்திரன் வழங்க ஏற்புரையினை நூலாசிரியர் க.பேர்ணாட் வழங்கியிருந்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--