2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் 'பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான நீதியை நோக்கிய பயணம்'

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத், ரொமேஸ் மதுசங்க


பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான நீதியை நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இன்று (6) ஊர்வலமொன்று இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகளானவை மக்களின் வாழ்க்கையையும், சமூக அபிவிருத்தியையும் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றமையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ளோரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஊர்வலத்தினை வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியா பிரதேச செயலகத்தின் முன்னாள் ஆரம்பித்த இவ் ஊர்வலம் கடை வீதியூடாக சென்று பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றியிருந்ததுடன் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை உள்ளடக்கிய துண்டுப்பிரசுர விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றினையும் கையளித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--