2021 மார்ச் 01, திங்கட்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவிலுள்ள நகைக்கடைகளில் நகை வாங்குவது போன்று சென்று  தங்கநகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இளம் பெண்ணொருவரை சனிக்கிழமை (22) கைதுசெய்ததாக  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பெண் இங்குள்ள நகைக்கடைகளுக்கு அடிக்கடி  சென்று, நகைகளை வாங்குவது போன்று நாடகமாடி அங்குள்ளவர்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடித்து வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

நகைக்கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கமெராக்களில் இப்பெண் நகைகளை கொள்ளையிடுவது பதிவாகியுள்ளது.  இந்நிலையில், இப்பெண் தொடர்பான தகவல்கள் அனைத்து நகைக்கடைகளிலுமிருந்து கிடைத்தது. நகைக்கடையொன்றுக்கு இவர் வந்தபோது, பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் இவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் சில பொருட்களை களவெடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர், வவுனியா சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் பயிற்சிக்காக வந்திருந்தபோது, சக பொலிஸாரின் கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட சில பொருட்களை கொள்ளையிட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .