2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பொலிஸாரெனக் கூறி வீட்டில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா,  கற்பகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு பொலிஸாரெனக் கூறிச் சென்ற நால்வர், தங்கநகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டதாக  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (08) இரவு இவ்வீட்டுக்குச் சென்ற இவர்கள் நால்வரும் தாங்கள்  பொலிஸாரெனவும்  சோதனையிட  வேண்டுமெனவும் கூறி வீட்டினுள் நுழைந்து  அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டனர்.

இதனைத் தொடர்ந்து,  சுமார் 6 இலட்சம் பெறுமதியான  தங்கநகைகள்  மற்றும் பணத்தை கொள்ளையி;ட்டுச் சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் கைத்துப்பாக்கி போன்றதொன்றை வைத்திருந்ததுடன், இக்கொள்ளையர்கள் சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் இருந்ததாக விசாரணையின்போது  குறித்த வீட்டிலுள்ளவர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--