2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு இழப்பீட்டு கோரிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட 22 இந்து ஆலயங்களுக்கு இழப்பீடுகள் கோரும் விண்ணப்பப் படிவங்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் விபரங்களைத் திரட்டித் தருமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய கிளிநொச்சி மாவட்டச் செயலக புனர்வாழ்வு பிரிவினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் ஊடாக ஆலயங்களின் விண்ணப்பப் படிவங்கள் திரட்டப்பட்டு கடந்த திங்கட்கிழமை (07) புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

யுத்தத்தினால் முழுமையாக மற்றும் பாரிய சேதமடைந்த ஆலயங்களுக்கே இவ்வாறு இழப்பீடு கோரி விண்ணப்பப்படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--