2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் தச்சனாங்குளம், இறம்பைக்குளம், மற்றும் குருமன்காடு ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் சேமக்காலைகளில் பார்தீனியம் ஒழிக்கும் வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பணியினை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்திதிருந்த தொண்டர்கள் இணைந்து நடத்தினர்.

இக் களையானது எமது நாட்டில் உருவானதன்று. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. எமது நாட்டில் இக்களை வளர்வதற்கு ஏதுவான சூழல் காணப்படுவதனாலும் அதற்கு எதிரான சக்திகள் இன்மையாலும் அவை மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

செவ்வந்தி இன வார்க்கத்தை சேர்ந்ததாக இத்தாவரத்தின் விதையானது 10 முதல் 15 வருடங்கள் உறங்கு நிலையில் காணப்படும். அத்துடன் ஒரு பூவில் 15 ஆயிரம் விதைகள் உற்பத்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--