2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

உறவுகளுக்கு சேவை செய்ய முன்வரவேண்டும்: வடமாகாண சுகாதார அமைச்சர்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்

புலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் களத்திலுள்ள உறவுகளுக்கு சேவை செய்ய முன்வரவேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்த பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் சுகாதாரதுறை குறிப்பிடத்தக்கவகையில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் வடமாகாணத்தின் சுகாதார துறையில் பலகுறைபாடுகள் நிவர்த்தி செய்யவேண்டியுள்ளது. எனவே புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர்கள்,வைத்திய நிபுணர்கள் உங்கள் ஊர்மக்களுக்க சேவையாற்ற முன்வரவேண்டும்.

இந்த பிரதேசம் யாழ் நகரிலிருந்து நீண்ட தூரத்தில் அமைந்துள்ளது. ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்கள் பயணம்செய்தே இன்று உங்களை சந்திக்க வந்துள்ளோம். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி இந்த பகுதியிலிருந்து யாழ்பாண போதானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலுள்ள கஸ்ரங்களை நானறிவேன். ஊடனடியாக நடைமுறைக்க வரும்வகையில் அடிப்படைவசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் 25 மில்லியன் செலவில் வெளிநோயாளர் பிரிவும் உத்தியோகத்ரகளுக்கான விடுதியும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் தமக்கான ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து உதவி வழங்குவதாக தெரிவித்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--