2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

கிளி. மாவட்டச் செயலகத்திற்குள் மக்கள் நுழையத் தடை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்குள் பொதுமக்கள் உள்நுழைவதற்கு கிளிநொச்சி பொலிஸாரினால் இன்று வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியமர்த்துமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்டச் செயலகத்திற்குள் உள்நுழையவுள்ளார்கள் என தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் இந்த நிலையில்,  பொதுமக்கள் எவரையும் மாவட்டச் செயலகத்திற்கு செல்ல அனுமதிக்கமாட்டோம் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் மாவட்டச் செயலகத்தில் தங்களது தேவைகளை நிவர்த்தி செய்ய வந்த மக்கள் உட்செல்லமுடியாமல் திரும்பிச் செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .