2021 மே 15, சனிக்கிழமை

அந்தோனியார் திருவுருவ சிலை திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

திருத்தந்தை பிரான்சிஸின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பியரே நியு ஜென்வன் ரொட், ஞாயிற்றுக்கிழமை (01) வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அந்தோனியார் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

வவுனியாவுக்கு இன்று மாலை விஜயம் செய்த பேராயருக்கு இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்துக்கு அண்மையில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டதுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதிரிகள் மற்றும் பொதுமக்கள் சூழ ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் முயற்சியால் அமைக்கப்பட்ட அந்தோனியார் திருவுருவத்தை திறந்து வைத்து விசேட ஆராதனைகளை மேற்கொண்ட பேராயர், அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில், மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை, அருட்தந்தையர்கள், அருட்சகோதிரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .