2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கிடப்பில் போடப்பட்டுள்ள மின் விநியோகம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோட்டை கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம் ஆகிய பகுதிகளுக்கான மின்விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதனை வழங்குவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்;டும் எனவும் இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கிராமங்களில் யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறி கடந்த ஆறு ஆண்டுகளாகியும் இன்றுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இக்கிராமங்களுக்கு விரைவாக மின்சாரம் வழங்குவதற்கு முன்மொழிகள் வழங்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை கிடப்பில் போடப்பட்டு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் மின்சாரம் வழங்குவதற்காக மின்கம்பங்கள், மின்னிணைப்பு கம்பிகள் போன்றன, குறித்த கிராமத்தில் வைக்கப்பட்டு வருடக்கணக்கில் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .