Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இரு நாட்களே உள்ள நிலையில் நாளை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் எடுத்துச்செல்லப்படவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் முழு வீச்சில் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
வவுனியா மாவட்ட செயலகத்தில் வாக்குப்பெட்கள், வாக்கு சீட்டுகளை நாளை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவற்றை ஒழுங்கமைக்கும் பணிகள்; முழு வீச்சில் இடமபெறுகின்றன.
அரசாங்க உத்தியோகத்தர்கள் அப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட செயலகத்தை சூழவும் பாதுகாப்பு பணியை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் இம்முறை தேர்தல் வன்முறைகள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் வன்னி தேர்தல் தொகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago