Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வன்னிப் பிராந்தியத்தின் கடைசி தமிழ் மன்னனான மாவீரன் பண்டாரவன்னியனின் 207ஆவது சிரார்த்த தினம் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், வவுனியா மாவட்ட செயலக வளவில் அமைந்துள்ள மாவீரனின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் வைபவம் காலை நகர சபைத் தலைவர் ஜி.நாதன் தலைமையில் நடைபெறும்.
மாவட்ட அரச அதிபர், வன்னி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
அஞ்சலி வைபவத்தினைத் தொடர்ந்து நகர சபை மண்டபத்தில் நினைவு சொற்பொழிவும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும் என ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025