Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் துயர் துடைப்பு மறு வாழ்வுச் சங்கம் தனது 25 வருட மனித நேய சேவையின் நிறைவினை நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் கொண்டாடுகின்றது. மன்னார் துயர் துடைப்பு மறு வாழ்வுச்சங்கம் தனது 25 வருட மனித நேயப் பணியின் போது தங்களுடைய சேவையின் போது உதவி புரிந்தவர்களையும் நினைவு கூறவுள்ளார்.
இதன்போது பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எ.நிக்கெலாஸ் பிள்ளை, சிறப்பு விருந்தினர்கலாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை இந்து மத பிரதம குரு.ச.மனோகரக் குருக்கள், மூர்வீதி ஜும்மாப் பள்ளிமௌலவி ஜனாப் செ.அஸிப் மன்னார் சறி சுர்ண பிம்மராம விகாராதிபதி – சங்.பி.என். விமலரத்ன தேரோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் வெள்ளி விழா மலர் வெளியீடும் இடம்பெறும்.
4 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago