2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

258 மீற்றர் நீளமான அரிப்பு பாலம் திறந்துவைப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன.

இதன் முதற்கட்டமாக தள்ளாடி- அரிப்பு- மறிச்சுக்கட்டியை இனைக்கும் (பீ 403) அரிப்பு பாலத்தை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ திறந்து வைத்தார். 258.08 மீட்டர் நீளம் கொண்ட இப்பாதை 7.35 மீட்டர் அகலமுடையதாகும். இதற்கென 540 மில்லியன் ரூபாய் வீதி அபிவிருத்தி அதிகார சபை செலவிட்டிருந்தது.

இதேபோன்று புத்தளம்- எலுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பாதை பணிகள் துரிதமாக ஆரம்பிக்க தேவையான உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை அரிப்பு கிராமிய குடிநீர் திட்டத்தையும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். இதன் மூல் சுமார் 600 குடும்பங்களை சேர்ந்த 1845 பேர் நன்மையடையவுள்ளனர்.

நாளொன்றுக்கு 10 ஆயிரம் லீட்டர் குடிநீர் இம்மக்களுக்கு தேவையாகவுள்ளது. இதுவரை முசலி பிரதேச சபை பவுசர்கள் மூலமே தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.  தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்த்தாங்கியில் 70 ஆயிரம் லீட்டர் தண்ணீர் சேமித்து வைக்க முடியும். நாளொன்று காலையும், மாலையும் தண்ணீர் விநியோகம் செய்ய முடியுமென முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய எஹியான் தெரிவித்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • mtmsiyath Thursday, 20 October 2011 11:11 PM

    மன்னார்-புத்தளம் பாதை எப்போது ஆரம்பம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--