2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

270 மில்லியன் ரூபா செலவில் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் புனர்நிர்மாணம்

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

வன்னி கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுர புனர்நிர்மாண பணிகள் 270 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

172 மீற்றர் நீளமான இத்தொலைத் தொடர்பு கோபுரத்தின் ஊடாக வட மாகாணத்திற்கான தொலைக்காட்சி, வானொலி மற்றும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடக அமைச்சின் அனுமதியுடன் தொலைக்காட்சி நிறுவனங்கள் இக்கோபுரத்தின் ஊடாக சேவையை வழங்க விண்ணப்பிக்கலாம் என பணிப்பாளர் அனுஅஷ பெல்பிட்ட கூறினார்.

அத்துடன் தொலைபேசிச் சேவை நிறுவனங்கள் இக்கோபுரத்தின் ஊடாக சேவை வழங்குவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களுக்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் எனவும் அனுஷ பெல்பிட்ட தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். Pix: Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .