2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு ரூ.5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜவ்பர்கான்)

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து திருக்கோயில் பிரதேச செயலகப்பிரிவில் வினாயகபுரம், காயத்திரி கிராமம் ஆகிய இடங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஹரிட்டாஸ் எகெட் நிறுவனம் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகளை நேற்று வியாழக்கிழமை காலை வழங்கியுள்ளது.

12 குடும்பங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களையும்  2 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் பெறுமதியான தையல் இயந்திரங்களையும் வழங்கியுள்ளனர்.

திருக்கோயில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது ஹரிட்டாஸ் எகெட் பணிப்பாளர் அருட்பேராசிரியர் ஸ்ரீதரன் சில்வெஸ்டர் பொருட்களை கையளித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--